இந்தியா - அமெரிக்கா உறவில் நெருக்கம்: ஜவாலின் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா
பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா
இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய முன்னேற்றமாக பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஜவாலின் ஏவுகணையானது மனிதர்களால் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய நடுத்தர தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்கோ கோர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே FGM-148 Javelin ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதர் செர்கோ கோர் தகவல்
ஒப்பந்தம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த அமெரிக்க தூதர் செர்கோ கோர், பெரிய செய்தி! பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். அத்துடன் இந்த ஒப்பந்தமானது எதிர்காலத்தில் கூட்டு தயாரிப்புக்கான கதவுகளையும் திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
BIG news! India plans to buy the battle-tested Javelin anti-tank system. Just as @secwar highlighted at the May 2026 Shangri-La Dialogue, this is a great step forward in the U.S.-India defense relationship and opens the door to co-production possibilities. The engagement between…
— Ambassador Sergio Gor (@USAmbIndia) August 28, 2026
ஆனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த புரிந்துணர்வின் கீழ் எத்தனை ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது அல்லது இதற்காக எவ்வளவு செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |