இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்
இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு வரவுள்ளது.
மோடி அரசு கொண்டு வர உள்ள Immigration and Foreigners Bill 2025 மசோதாவில், இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வெளிநாட்டினர் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த மசோதா, தற்போதைய Passport (Entry into India) Act, 1920, Registration of Foreigners Act, 1939, Foreigners Act, 1946, மற்றும் Immigration (Carriers’ Liability) Act, 2000 ஆகிய சட்டங்களை மாற்றி, புதிய மற்றும் விரிவான சட்டத்தை உருவாக்குகிறது.
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.
- குடிவரவு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிர்ணயிக்கப்படும்.
- வெளிநாட்டினர்கள் இந்தியாவில் தங்கும் முறையை கண்காணிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
- இந்தியாவில் வெளிநாட்டினர் சேர்க்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்துவிவரமாக குறிப்பிடப்படும்.
- இந்தியாவில் வெளிநாட்டினரின் இயக்கங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர்.
இந்த மசோதா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Stricter immigration rules coming in India, fake passport, new Immigration and Foreigners Bill 2025