ட்ரம்பை மீண்டும் சீண்டும் இந்தியா... கச்சா எண்ணெயை அடுத்து இதன் இறக்குமதி அதிகரிப்பு
ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சில மேற்கத்திய நாடுகளும் எதிர்த்து வருகின்றன.
உர கொள்முதல்
இதன் காரணமாகவே கூடுதலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது திணித்தது. இருப்பினும், சர்வதேச விதிகளை கடைபிடிக்கும் அதே வேளையில், தனது தேவைகளை எங்கிருந்தும் பெற்றுக் கொள்ள சுதந்திரம் உள்ளது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் விளைவாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது மட்டுமல்லாமல், உர கொள்முதலையும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும், ரஷ்ய உரங்களின் இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆட்சேபனைகளை மீறி, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் இரண்டின் இறக்குமதியையும் இந்தியா அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்ய உரங்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை: ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் திட்டவட்டம்
மேலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் ரஷ்யாவின் இந்தியாவிற்கான உர ஏற்றுமதி 2.5 மில்லியன் டன்களை எட்டியது, இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் அதன் பங்கை சாதனை அளவில் 33 சதவீதம் என உயர்த்தியுள்ளது.
வர்த்தக உறவு
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு மூன்றாவது டன் உரமும் தற்போது ரஷ்யாவிலிருந்து வருகிறது என்று ஒரு ரஷ்ய தொழில்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தியுள்ளது என்றே தெரிவிக்கின்றனர். இந்த அதிகரிப்புக்கு முக்கியமாக பாஸ்பரஸ் சார்ந்த உரங்களின் அதிக விநியோகமே காரணமாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ரஷ்யாவிலிருந்து உரங்களின் இறக்குமதி 400,000 டன்கள் அல்லது 20 சதவீதம் அதிகரித்து, 2.5 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய உரங்களை வாங்குவதில் முன்னணியில் உள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |