உலகின் இராணுவ வலிமையில் இந்தியாவுக்கு 4-ஆம் இடம்! எந்த நாட்டுக்கு முதலிடம்?
உலகின் இராணுவ வலிமையில் இந்தியா நான்காம் இடத்திலும், பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
Military Direct இணையதளம் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு, படைவீரர்களின் எண்ணிக்கை, படைக்கலன்கள், கருவிகள், ஆயுதங்ககள், படைவீரர்களின் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
அதில் சீனா முதல் இடத்தையும், அமேரிக்கா 2-ஆம் இடத்தையும், ரஷ்யா 3-ஆம் இடத்தையும், இந்திய 4-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
அதேபோல், பிரான்ஸ் 5-ஆமா இடத்திலும், பிரித்தானியா 9-ஆம் இடத்திலும் உள்ளன.
மேலும், பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டில், அமேரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-ஆம் இடத்திலும், இந்திய மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா வருடத்துக்கு 732 பில்லியன் டொலர் (USD) செலவிடுகிறது.
அதேபோல், சீனா 261 பில்லியன் டொலர்களும், அதனைத் தொடர்ந்து இந்தியா ஆண்டுக்கு 71 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிடுகின்றன.
