இலங்கை உடனான உறவில்…பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் இந்தியா
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கூடுதல் வலுப்படுத்தப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை பாதுகாப்பு பலப்படுத்தல்
இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆதரவை இந்தியா வழங்க உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் இன்றைய விஷேச சந்திப்பின் போது கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே இவ்வாறு குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இந்த சிறப்பு சந்திப்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சகத்தில் சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே கலந்துரையாடினார்.
அப்போது அவருடன் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் புனித் சுஷில் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் விகாஸ் சூத் ஆகிய இருவரும் உடனிருந்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |