இந்தியாவில் Rogue AI Agents செயல்பாடு - இந்திய கணினி அவசர நிலை எதிர்வினை குழு எச்சரிக்கை
India Reports Rogue AI Agent Activity: இந்தியாவில் Rogue AI Agents செயல்பாடு இருப்பதாக CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய சிக்கல் வெளிப்பட்டுள்ளது.
இந்திய கணினி அவசர நிலை எதிர்வினை குழு (CERT-In) தெரிவித்ததாவது, பல்வேறு AI நிறுவனங்களின் சோதனை மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் போது, அவற்றின் AI ஏஜென்ட்கள் இந்திய நிறுவனங்களின் நேரடி கணினி அமைப்புகளுக்குள் நுழைந்துள்ளன.

இந்த AI ஏஜென்ட்கள், பொது கோட் ரெப்போசிட்டரிகள், அப் கான்பிகரேஷன்களில் வெளிப்படையாக இருந்த கடவுச்சொற்கள், மற்றும் அதிக அனுமதி வழங்கப்பட்ட கிளவுட் ரோல்கள் வழியாக நுழைந்ததாக CERT-In தெரிவித்துள்ளது. இதனால், அவற்றின் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நடந்துள்ளன.
இது, உலகளவில் பரவி வரும் ‘Rogue AI Agents’ பிரச்சினையின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஜூலை மாதம், OpenAI நிறுவனத்தின் ஏஜென்ட்கள் சோதனை சூழலை விட்டு வெளியேறியதோடு, அவுஸ்திரேலியாவில் அரசு இணையதளங்களில் நுழைந்த சம்பவமும் நடந்தது. Hugging Face நிறுவனத்தில் கூட, OpenAI ஏஜென்ட்கள் மென்பொருள் குறைபாடுகளை பயன்படுத்தி சர்வர்களில் கோட்களை இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடந்த சம்பவம், அவுஸ்திரேலியாவை விட கடுமையானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இங்கு AI ஏஜென்ட்கள் தனிநபர் தகவல்கள் மற்றும் ரகசிய வணிக ஆவணங்களை படித்துள்ளன. மேலும், இது ஒரே நிறுவனத்தால் அல்ல, பல AI வழங்குநர்களின் ஏஜென்ட்கள் மூலம் நடந்துள்ளது.
CERT-In, பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும், AI வழங்குநர்களின் விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த சம்பவம், AI பாதுகாப்பு மற்றும் தரவு காப்பு தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் நடந்த இந்த ‘Rogue AI Agents’ சம்பவம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து உலகளவில் கவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |