அரசின் உறுதியளிப்பையும் மீறி பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்
இந்திய அரசு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்துள்ள நிலையிலும், டெல்லியில் வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்க முண்டியடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பதற்றம் வேண்டாம்
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரித்துவரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா என மக்கள் பதற்றம் அடைய வேண்டாம், panic buyingக்கான தேவை இல்லை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்மிடம் போதுமான உணவுப்பொருட்கள் உள்ளன. எரிவாயு கையிருப்பும் போதுமான அளவில் உள்ளது, விநியோகத்திலும் எந்த பாதிப்பும் இல்லை.
உரம், பருப்பு வகைகள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.
சரக்குகளைக் கொண்டு செல்லும் விமான சேவை, ரயில்கள், சாலை போக்குவரத்து என எதுவும் பாதிக்கப்படவில்லை.
ஆகவே, மக்கள், குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள மக்கள், பயந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்
ஆனால், அரசு உறுதியளித்துள்ள நிலையிலும், டெல்லியில் வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்க முண்டியடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மளிகைக் கடைகள், மருந்தகங்கள், ஒன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள், அரிசி, பருப்பு முதலான உணவுப்பொருட்கள், மருந்துகள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் துவங்கியுள்ளார்களாம்.
டெல்லியிலுள்ள கடைக்காரர்கள் பலர், மசாலா வகைகள், சமையல் எண்ணெய், மாவு முதலான பொருட்களை ஐந்து முதல் பத்து கிலோ வரை மக்கள் வாங்கிச் செல்லத் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
அரிசி, பருப்பு, முதலான பொருட்களை, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு போதுமான அளவுக்கு வாங்கிவைக்க விரும்புவது தெரிகிறது என்கிறார் கடைக்காரர் ஒருவர்.
எல்லோருக்கும் போதுமான பொருட்கள் இருக்கிறது. என்றாலும், மக்கள் மொத்தமாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துவருகிறது என்கிறார் அவர்.
இணையம் வாயிலாக, டார்ச் லைட் போன்ற பொருட்களையும் மக்கள் வாங்க முயல, பல தளங்களில் ’விற்றுத் தீர்ந்துவிட்டது’ என பதில் வருகிறதாம்.
அதேபோல, இரத்தக்கொதிப்பு, நீரிழிவு மற்றும் வலிக்கான மருந்துகளையும் அதிக அளவில் வாங்கிவருவதாக மருந்தக ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |