90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு
இந்திய அரசு, சில்லறை எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் மொத்த (bulk) விற்பனையை 90 நாட்களுக்கு தற்காலிகமாக கட்டுப்படுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
அரசின் அறிவிப்பின்படி, சில்லறை நிலையங்களில் ஒரே வாடிக்கையாளருக்கு தினசரி அதிகபட்சம் 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்க அனுமதி உள்ளது.
மேலும், சில்லறை நிலையங்களில் வாங்கப்பட்ட டீசலை மறுவிற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, சலுகை விலையில் வழங்கப்படும் எரிபொருள் திசைதிருப்பல் (diversion) ஏற்படாமல் தடுக்கவும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கே எரிபொருள் கிடைக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட நிலையங்கள் மூலம் எரிபொருள் வாங்க வேண்டும் என உத்தரவு கூறுகிறது.
இந்த கட்டுப்பாடு, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எரிபொருள் நிறுவனங்களின் விற்பனை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. மே 15 முதல், தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.75 (சுமார் 5%) மற்றும்; டீசல் ரூ.4.82 (சுமார் 5.5%) உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலகளாவிய கச்சா என்னை விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நேரடியாகப் பிரதிபலித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |