முடிவுக்கு வந்த போர் பதற்றம்: மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்!
இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி திரும்பியதை அடுத்து பாகிஸ்தான் தனது வான் பரப்பை திறந்துள்ளது.
மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்திய விமானப்படை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாரான நிலையில், பாகிஸ்தான் அரசு தனது நாட்டின் வான்வெளியை உடனடியாக மூடியது.
பாகிஸ்தானிய விமானங்கள் உட்பட அனைத்து சர்வதேச விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீண்டும் வான்வழியை திறந்த பாகிஸ்தான்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே சமரச முயற்சியை மேற்கொண்டார்.
அவரது தலையீட்டின் காரணமாக, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளின் பிரதிநிதிகளும் மே 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தனது வான்வெளியை மீண்டும் திறந்துள்ளது.
இதனால் பாகிஸ்தானில் விமான போக்குவரத்து விரைவில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |