இந்திய விமான நிலையங்களில் துருக்கி நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து
தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்திய விமான நிலையங்களில் செயல்படும் துருக்கி நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, இந்தியாவின் 9 முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனமான Celebi Ground Handling India Pvt Ltd-க்கு பாதுகாப்பு அனுமதி இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
Civil Aviation அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், தேசிய பாதுகாப்பை முன்னிட்டு அனுமதி உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, துருக்கி நிறுவனத்திற்கு இந்தியா எடுத்துள்ள முதல் நேரடி தீர்மானமாகும்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, துருக்கியின் எதிரிகளான கிரீஸ், ஆர்மேனியா, சைப்ரஸ் மற்றும் அரபு உலகின் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் துருக்கியின் நெருக்கம் மற்றும் இந்தியாவை குறிவைத்து மே 8 இரவில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட Bayraktar TB2 மற்றும் Asisguard SONGAR போன்ற டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்பதும் கவலைக்குரியதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் “Boycott Turkey” என்ற சமூக ஊடக இயக்கம் வேகமாக பரவுகின்றது. இந்திய சுற்றுலாப்பயணிகள் துருக்கி பயணத்தை ரத்து செய்து வருவதுடன், பல கல்வி நிறுவனங்கள் துருக்கியுடன் உள்ள ஒப்பந்தங்களை முடித்துவிட்டன.
CAIT போன்ற வணிக அமைப்புகள், துருக்கியுடன் உள்ள அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் முடிக்க மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
துருக்கியின் Celebi Aviation நிறுவனம் இந்திய விமான நிலையங்களில் விமான தரை சேவைகள் மற்றும் டெல்லி சரக்கு சேவைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Turkey airport ban | Celebi Aviation India clearance revoked | Operation Sindoor impact | Turkey Pakistan drone links | Celebi security clearance cancelled | Boycott Turkey in India | Turkish firm banned in India | India national security aviation | Celebi India ground handling ban | India Turkey diplomatic tension