இந்தியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்று... சொத்து மதிப்பு ரூ 67,800 கோடி: இவர்களின் தொழில்
அம்பானி குடும்பம் போன்று, இந்தியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்று மும்பையை சேர்ந்த டானி குடும்பம். டானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது தோராயமாக ரூ 67,841 கோடி என்றே கூறப்படுகிறது.
Asian Paints நிறுவனம்
Asian Paints நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட அஸ்வின் டானி என்பவரின் குடும்பத்தினரே, டானி குடும்பம் என அறியப்படுகின்றனர். அஸ்வின் டானியின் சொத்து மதிப்பு மட்டும் 8 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கூறுகின்றனர்.
அஸ்வின் டானியின் தந்தையான சூர்யகாந்த் டானி என்பவரே 1942ல் Asian Paints நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிய Asian Paints நிறுவனத்தின் வருவாய் என்பது 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது அஸ்வின் டானியின் மகன் மலவ் டானி Asian Paints நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்நிறுவனம் தனது ஆண்டு வருவாயில் 98 சதவீதத்தை உள்நாட்டு சந்தையில் இருந்தே திரட்டுகிறது.
டெட்ராய்டில் விஞ்ஞானி
அஸ்வின் டானி 1968ல் Asian Paints நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக சேர்ந்தார். அதன் பின்னர் 1997 முதல் 2009 வரை, துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர், 2021ல் ஓய்வு பெறும் வரையில் அவர் நிர்வாகப் பொறுப்புகளற்ற தலைவராக நியமிக்கப்பட்டார். 1944ல் மும்பையில் பிறந்த அஸ்வின் டானி 1966ல் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்காவின் Akron பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அத்துடன் டெட்ராய்டில் விஞ்ஞானியாக பணியாற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |