இந்தியாவின் பணக்கார பெண் - ரூ. 63000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கியது எப்படி?
தேஷ் பந்து குப்தா என்ற மருந்து கம்பெனியின் நிறுவனரின் மகளான வினிதா, தந்தையின் மருந்து கம்பெனிகளை தன்னுடைய பொறுப்பில் ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
யார் இந்த வினிதா குப்தா?
கடந்த இரண்டு தசாப்தங்களில் கோடீஸ்வர பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கையில் இந்தியா ஒரு எழுச்சியை கண்டுள்ளது.
இன்று பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் பல இந்திய பெண்கள் உள்ளனர்.
அதில் ஒருவர் தான் இந்த லூபின் பார்மாவின் வினிதா குப்தா.
இவர் தந்தையின் மருந்து கம்பெனிகளை தன்னுடைய பொறுப்பில் ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
1968 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை வினிதா குப்தாவின் தந்தையின் தலைமையில் இந்நிறுவனம் நிறுவப்பட்டு வந்தது.
2013 ஆம் ஆண்டில் இருந்து இவர் வழிநடத்துகிறார். வினிதா தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும்போது, அவரது சகோதரர் நிலேஷ் குப்தா நிர்வாக இயக்குநராகவும் அவரது தாயார் மஞ்சு குப்தா தலைவர் பதவியிலும் இருகிறார்.
வினிதா குப்தா, இன்று ஒரு பில்லியனர் CEO ஆவார். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் MBA படித்தார். அதற்கு முன்பு மும்பை பல்கலைக்கழகத்தில் மருந்தகத்தில் பட்டம் பெற்றிருந்தார்.
இவர் அமெரிக்காவின் துணை நிறுவனமான லூபின் தலைவராகவும் உள்ளார்.
வினிதா குப்தாவின் லூபின் பார்மாவின் சந்தை மதிப்பு சுமார் 63,750 கோடி ரூபாயாகும்.
2022-23 நிதியாண்டிற்கான வினிதாவின் ஊதியம் ரூ. 10.9 கோடி ஆகும். சமீபத்திய செல்வந்த பெண்கள் பணக்காரர் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
பணக்காரப் பட்டியலின்படி அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார் ரூ. 24,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |