இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் பற்றி தெரியுமா? ஆனால் வந்தே பாரத் அல்ல
இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயிலை பற்றிய தகவலை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதல் டீலக்ஸ் ரயில்
இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயிலாகக் கருதப்படும் டெக்கான் குயின், ஜூன் 1, 2024 அன்று அதன் 94 ஆண்டுகால சேவையை நிறைவு செய்தது.
இந்த ரயிலானது ஜூன் 1, 1930 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது, இந்தியாவில் ரயில் பயணங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்தது.

தந்தை இறந்ததால் தாயின் பென்ஷன் பணம் ரூ.500-யை வைத்து.., முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில், மத்திய ரயில்வேயின் முன்னோடியான கிரேட் இந்தியன் தீபகற்ப ரயில்வேக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக டெக்கான் குயின் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த டீலக்ஸ் ரயில் மும்பை மற்றும் புனே இடையே இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஈடு இணையற்ற ஆடம்பரத்தையும் வசதியையும் வழங்கியது.
மேலும், இந்த ரயிலானது ஆரம்பத்தில் ஏழு பெட்டிகளுடன் தொடங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை வழங்கியது.
பின்னர், அதிக பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து டெக்கான் குயின் ரயிலில் 1966 ஆம் ஆண்டில் அதன் உட்புறங்கள்,எஃகு-உடல் பெட்டிகள் மேம்படுத்தப்பட்டது.
இந்த ரயிலில் உள்ள நவீன வசதிகளில் டோஸ்டர், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டீப் ஃப்ரீசர் பொருத்தப்பட்ட பேன்ட்ரி கார் ஆகியவை அடங்கும் எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |