இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவின் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செலவு எவ்வளவு?
ஏப்ரல் 19, 1975 -ம் ஆண்டில் ஆர்யபட்டா (Aryabhata) என்ற முதல் செயற்கைக்கோளை இந்தியா உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்டது.
முதல் இந்திய ஆளில்லா செயற்கைக்கோளை உருவாக்குவதன் நோக்கம் என்னவென்றால், எக்ஸ்-ரே வானியல் (X-ray astronomy), வானியல் மற்றும் சூரிய இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை நடத்துவதற்காக தான்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி செயற்கைக்கோளுக்கு ஆர்யபட்டா என்று பெயரிட்டார். அதாவது, ஐந்தாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வானியலாளர் மற்றும் கணிதவியலாளரின் நினைவாக இந்த செயற்கைக்கோள் பெயரிடப்பட்டது.
இந்த செயற்கைக்கோளின் எடை 360 கிலோகிராம் ஆகும். இது இஸ்ரோவால் கட்டப்பட்டது. இந்த செயற்கைகோள், ரஷ்யாவால் Kapustin Yar ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
ராக்கெட் ஏவுதலுக்கு காஸ்மோஸ்-3எம் (Kosmos-3M) ஏவுகணையைப் ரஷ்யா பயன்படுத்தியது. செயற்கைக்கோள் தரவு பெறும் மையமாக பெங்களூருவில் உள்ள ஒரு கழிப்பறை மாற்றப்பட்டது.
செயற்கைக்கோளின் மின் சக்தி அமைப்பிலும் ஒரு செயலிழப்பு பதிவானது. இதனால், நான்கு நாட்களுக்கு சோதனைகள் நிறுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.3 கோடியாக இருந்தது. இதன்பிறகு furniture மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரித்ததால் செலவும் உயர்ந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி 1976-1977 -ம் ஆண்டுக்கு இடையில் 2 ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் செயற்கைக்கோளை அச்சிட்டு கொண்டாடியது. மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தபால் தலையை வெளியிட்டன.
ஆர்யபட்டா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 11, 1992 அன்று பூமியின் விண்வெளியில் மீண்டும் நுழைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |