82 கிமீ தூரத்தை கடக்க 1 மணிநேரம் மட்டுமே.., இந்தியாவின் மிகப்பெரிய நமோ பாரத் நிலையம் தயார்
'நமோ பாரத்' ரயில் சேவை என்றும் அழைக்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) மக்கள் பயணிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
நமோ பாரத் நிலையம்
இந்த சேவையின் மிகப்பெரிய நிலையமான சராய் காலே கான், இப்போது முழுமையாக தயாராக உள்ளது, விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் இந்த நிலையம் நவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
சராய் காலே கான் நிலையமானது விமான நிலையங்களில் காணப்படும் வசதிகளை ஒப்பிடக்கூடிய பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
இந்த நிலையத்தில் 6 நடைமேடைகள் மற்றும் 4 தண்டவாளங்கள், 18 நகரும் படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
அதோடு இந்த நிலையம் escalators, lifts மற்றும் air-conditioned waiting areas,போன்ற நவீன வசதிகளுடன் உள்ளது. மேலும், 6 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் உள்ளன.
இங்கு 75 கார்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் இடம் உள்ளது.
இந்த நிலையம் டெல்லி மெட்ரோவின் பிங்க் லைனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நகரின் பிற பகுதிகளுக்கு எளிதாக பயணிக்க முடியும்.
கூடுதலாக, இந்த நிலையம் நிஜாமுதீன் ரயில் நிலையம் மற்றும் இன்டர்-ஸ்டேட் பஸ் டெர்மினல் (ISBT) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், இந்த நிலையம் டெல்லி-குர்கான்-ஆல்வார் மற்றும் டெல்லி-பானிபட்-கர்னல் வழித்தடங்களுடனும் இணைக்கப்பட்டு, அதன் இணைப்பை மேலும் மேம்படுத்தும்.
இந்த ரயிலானது சராய் காலே கான் முதல் மீரட் வரையிலான 82 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 55 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்தில் கடக்கும் நிலையில் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தைக் கொண்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |