2024ம் ஆண்டில் உலகின் முதல் 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு.., இதில் ஒரே ஒரு இந்திய நகரம் மட்டுமே
உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்த முதல் 100 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நகரம் மட்டுமே இடம்பிடித்துள்ளது.
100 நகரங்கள் பட்டியல்
தரவு பகுப்பாய்வு நிறுவனமான Euromonitor International இன் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது, பொருளாதாரம், தொழில் துறை, சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், பாரிஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. மேட்ரிட் இரண்டாவது இடத்திலும், டோக்கியோ மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதனை தொடர்ந்து, ரோம், மிலன், நியூயார்க், ஆம்ஸ்டர்டேம், சிட்னி, சிங்கப்பூர், பார்சிலோனா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த 100 நகரங்களில் பட்டியலில், இந்தியாவை பொறுத்தவரை ஒரே ஒரு நகரம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி 74 -வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், கெய்ரோ 100-வது இடத்திலும், ஜுஹாய் 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98வது இடத்திலும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |