ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்: இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க இந்தியா அதிரடி நடவடிக்கை
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படைக்கும் இடையே 6வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆபத்தான பகுதியில் உள்ள மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான பகுதியில் இருக்குமாறு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தி வருகிறது.
AP
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலில் உள்ள தங்கள் குடிமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் அஜய்
இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள 18,000 இந்திய குடிமக்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்து இருந்தவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான “ஆபரேஷன் அஜய்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் மற்ற பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |