ஒரே ஒரு நடைமேடை - இந்தியாவின் மிகச்சிறிய ரயில் நிலையம் இதுதான்
இந்தியாவின் மிகச்சிறிய ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?
மிகச்சிறிய ரயில் நிலையம்
ஒடிசாவின் கியோஞ்சரில் உள்ள பன்ஸ்பானி ரயில் நிலையம்தான், இந்தியாவின் மிகச்சிறிய ரயில் நிலையம். இது 200 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையைக் கொண்டுள்ளது.

இது உள்ளூர் பயணிகளுக்கு சேவையை வழங்குகிறது. மேலும், இரும்புத் தாது போன்ற கனிமங்களை கொண்டு செல்கிறது.
பிரம்மபூர்-டாடாநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பூரி-ஆனந்த் விஹார் டெர்மினல் வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் விசாகப்பட்டினம்-டாடாநகர்-விசாகப்பட்டினம் வாராந்திர லேட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் மட்டுமே பன்ஸ்பானி ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.
பன்ஸ்பானி
ஏனெனில் அதன் நடைமேடை நீண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இடமளிக்கும் வகையில் இல்லை.

பன்ஸ்பானி ரயில் நிலையம் ஒடிசாவில் உள்ள ஜரோலி ரயில் நிலையத்திற்குப் பிறகு, இந்திய ரயில்வேயின் இரண்டாவது பெரிய இரும்புத் தாது ஏற்றுதல் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.