தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலந்துடனான 5வது டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்தியும் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்கா டி20 அணி, இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
ஜூன் 9ம் திகதி முதல் 19ம் திகதி வரை போட்டிகள் நடக்கயிருக்கின்றன. ஜூன் 9 அன்று டெல்லியில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி தொடங்கும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
ஜூலை 1-5 முதல் பர்மிங்காமில் உள்ள Edgbaston-ல் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மறு திட்டமிடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியையும் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்தியா தற்போது டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி:கே.எல். ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷாப் பண்ட் , தினேஷ் கார்த்திக் , ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய் , புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
சிங்கத்தின் வாய்க்குள் கையை விட்ட பாதுகாவலரின் விரல் துண்டான பயங்கரம்! பீதியான பார்வையாளர்கள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் . ரிஷாப் பண்ட் ,துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் .புதிதாக உம்ரான் மாலிக் ,அர்ஷ்தீப் சிங் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.