இலங்கை தொடருக்கான இந்திய இளம் அணி அறிவிப்பு! CSK வீரர்கள் பலருக்கு வாய்ப்பு: கேப்டன் யார் தெரியுமா?
இலங்கை தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 தொடருக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி வரும் ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான அட்டவணை சில தினங்களுக்கு முன் வெளியானது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் ஒரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இது குறித்து பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த இரண்டு தொடர்களுக்கு ஷிகார் தவானே கேப்டனாக இருப்பார் என்று அறிவித்துள்ளது.
India Squad:
— BCCI (@BCCI) June 10, 2021
Shikhar Dhawan (C), Bhuvneshwar Kumar (VC), P Shaw, D Padikkal, R Gaikwad, Suryakumar Yadav, M Pandey, H Pandya, Nitish Rana, Ishan Kishan (WK), S Samson (WK), Y Chahal, R Chahar, K Gowtham, K Pandya, Kuldeep Yadav, V Chakravarthy, D Chahar, N Saini, C Sakariya
அதே போன்று அணிக்கு துணை கேப்டான புவனேஷ்குமார் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் CSK வீரர்கள் Ruturaj Gaikwad, Deepak Chahar மற்றும் Krishnappa Gowtham Sai ஆகிய மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.
Periya #WhistlePodu to our Lions picked for India's tour of Sri Lanka! ?#SLvIND #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/Ynbd8XQkbK
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) June 10, 2021
அதுமட்டுமின்றி நெட் பவுலராக ஒரு CSK வீரர் Sai Kishore தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்திக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் பட்டியல்
Shikhar Dhawan (C), Bhuvneshwar Kumar (VC), P Shaw, D Padikkal, R Gaikwad, Suryakumar Yadav, M Pandey, H Pandya, Nitish Rana, Ishan Kishan (WK), S Samson (WK), Y Chahal, R Chahar, K Gowtham, K Pandya, Kuldeep Yadav, V Chakravarthy, D Chahar, N Saini, C Sakariya