சாதித்து காட்டிய இந்தியாவின் டாப் 5 பெண் தொழிலதிபர்கள்..! அவர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்தியாவின் டாப் 5 பெண் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பு குறித்து இந்த செய்தி சுருக்கத்தில் பார்ப்போம்.
இந்திய பெண் தொழிலதிபர்கள்
இந்தியாவில் உள்ள பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலை எடுத்து பார்த்தால் அதில் பெண் தொழிலதிபர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவர்கள் தங்களின் தனித்துவமான திறமை மற்றும் ஆளுமையால் தொடர்ந்து சாதித்து இந்தியாவின் முன்னணி பெண் தொழிலதிபர்கள் வளர்ந்துள்ளனர்.
அவ்வாறு இந்தியாவில் வெற்றி பெற்றுள்ள டாப் 5 பெண் தொழிலதிபர்கள் குறித்தும், அவரது சொத்து மதிப்பு குறித்தும் தற்போது பார்ப்போம்.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா பிரபலமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின் மொத்த சொத்து சுமார் ரூ.84,330 கோடி ஆகும்.
இவர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் இருந்து வருகிறார்.
ஃபால்குனி நாயர்
ஃபால்குனி நாயர் குடும்ப நிறுவனர் மற்றும் நைகா(nykaa) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.57,520 கோடி ஆகும்.
இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலிலும், உலகின் பத்தாவது பணக்கார பெண்மணி என்ற பட்டியலிலும் ஃபால்குனி நாயர் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு இவரது nykaa நிறுவனம் பொதுவெளிக்கு வந்த பிறகு அவரது சொத்து மதிப்பு ஒரு வருடத்திலேயே சுமார் 963 சதவீதம் அதிகரித்துள்ளது.
கிரண் மசூம்தார் ஷா
கிரண் மசூம்தார் ஷா பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.29,030 கோடி ஆகும்.
இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான கிரண் மசூம்தார் ஷா, வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்கான சிறப்பான வழிகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.
நிலிமா மோடபார்ட்டி
நிலிமா மோடபார்ட்டி இந்தியாவில் பிரபலமான டிவிஎஸ் ஆய்வகத்தின் இயக்குநர் ஆவார்.
இவர் ஆய்வகங்களின் பொருள் ஆதாரம், கொள்முதல், கார்ப்பரேட் நிதி மற்றும் முதலீட்டாளர்கள் உறவு என அனைத்து உறவுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதனால் மட்டும் இவரது ஒரு ஆண்டு சொத்து மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. நிலிமா மோடபார்ட்டி மொத்த சொத்து மதிப்பு ரூ.28,180 கோடி.
ராதா வேம்பு
ஜோஹோவின்(ZOHO) இணை நிறுவனரான ராதா வேம்பு-வின் சொத்து மதிப்பு சுமார் ரூ.26,260 கோடி.
ராதா வேம்பு தனது சகோதரர் ஶ்ரீதர் வேம்புடன் இணைந்து டெக் நிறுவனத்தை ஒன்றை தொடங்கி கடந்த 2007ம் ஆண்டு முதல் அதனை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
தமிழகத்தை சேர்ந்த ஜோஹோ டெக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 127 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |