இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் டாப் 8 நகரங்கள்: மோசமடையும் டெல்லியின் நிலைமை
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு இந்தியாவின் சுத்தமான காற்று உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சுத்தமான காற்று உள்ள நகரங்கள்
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி ஏற்கனவே காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.
இருப்பினும் இந்தியாவின் பல நகரங்கள் தொடர்ந்து நல்ல காற்றின் தரத்தை பதிவு செய்து வருகின்றன.
இந்த தரவுகள், இந்தியாவின் இன்னும் சுத்தமான காற்று மற்றும் சுவாசிக்க கூடிய காற்றுக்கான சாத்தியக்கூற்றை எடுத்துரைக்கிறது.
17 AQI தர மதிப்பீட்டுடன் மேகாலயாவின் ஷில்லாங் நகரம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து யாத்கீர் 24 AQI, திருப்பதி 25 AQI, மடிக்கேரி 25 AQI, தாவணகெரே 29 AQI, கார்வார் 30 AQI, காங்டாங் 34 AQI, ராய்பூர் 40 AQI ஆகியவை தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
தலைநகர் டெல்லியின் மோசமான நிலை
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்(CPCB) தரவுகளின்படி, தலைநகர் டெல்லியின் தென்மேற்கு நகரான ஆர்.கே புரத்தில் காற்றின் தரக் குறியீடு(AQI) 380 ஆக பதிவாகியுள்ளது.
அதைப்போல நேரு நகர் 390 AQI, பவானா 376 AQI என்ற அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |