இந்தியாவின் டிராக்டர் ராணி யார் தெரியுமா? ரூ.10,000 கோடி நிறுவனத்தின் வெற்றி ரகசியம்!
இந்தியாவின் டிராக்டர் துறை வளர்ச்சியின் பின்னணியில் ஒரு அசாதாரண கதை பொதிந்துள்ளது.
இதுவரை ஆண்களின் ஆதிக்கமாக இருந்த இந்தத் துறையில் புதிய வரலாறு படைத்தவர் ஒரு பெண்.
அவர்தான் இந்தியாவின் டிராக்டர் ராணி எனப் போற்றப்படும் மல்லிகா ஸ்ரீனிவாசன்.
TAFE (Tractors and Farm Equipment Limited) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான இவர், இந்திய பில்லியனர் வெணுகோபால் ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.
குடும்ப வியாபாரத்தை உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தியாளராக உயர்த்தி, ரூ.10,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர்த்திய பெருமை மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கே சேரும்.
தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்
1959 இல் பிறந்த மல்லிகா சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றார்.
படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய மல்லிகா, தந்தையின் அழைப்பின் பேரில் 1986 ஆம் ஆண்டு TAFE நிறுவனத்தில் இணைந்தார்.
வியாபாரத்தின் அனைத்து நிலைகளையும் படிப்படியாகக் கற்றுக் கொண்ட இவர், விவசாயிகளின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டார்.
வெறும் தொழிலதிபராக இல்லாமல், கிராமப்புற வாழ்க்கையையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் நேரில் பார்க்கும் நோக்கில் அடிக்கடி கிராமப்புறங்களை பார்வையிட்டார்.
இதன் மூலம் பெற்ற அனுபவங்கள், விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ற மலிவு விலை உபகரணங்களை உருவாக்க உதவியது..
சவால்களைத் தாண்டிய வெற்றி
சந்தை ஏற்ற இறக்கங்கள், போட்டி நிறுவனங்களின் அழுத்தம் என பல்வேறு சவால்களை மல்லிகா சந்தித்தார்.
ஆனால் தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக 2005 ஆம் ஆண்டு Eicher’s tractor-ன் பிரிவை TAFE கைப்பற்றியது மற்றும் துருக்கியில் ஒரு தொழிற்சாலையுடன் அதன் விரிவாக்கத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்தியது.
Forbes இந்தியாவின் பெண் தலைவர் மற்றும் Forbes ஆசியாவின் முதல் 50 சக்திவாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்து மல்லிகா ஶ்ரீனிவாசன் சாதனை படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |