நாங்க எப்படி அப்போ நினைச்சோமோ... இப்போ இந்தியாவுக்கு அந்த நிலை தான்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் பெருமிதம்
இந்தியர்கள் இப்போது எங்கள் அணியில் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என்று கூறுவார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆன ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்த 2021-ஆம் ஆண்டு 29 டி20 போட்டிகளில் 20 போட்டிகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு அதிக டி20 போட்டிகள் வென்ற அணியாக உள்ளது.
இதுமட்டுமின்றி பாகிஸ்தான் டி20 அணியின் துவக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் முகவது ரிஸ்வான் ஜோடி, 2021-ஆம் ஆண்டு, மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ரிஸ்வான் நம்ப முடியாத வேகத்தில் ரன்களை குவித்து கொண்டிருக்கிறார். கடந்த டிசம்பர் 13-ஆம் திகதி(2021) முதல் 16-ஆம் திகதி வரை நடைபெற்ற டி20 போட்டிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் துவங்கிய மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 203(2 அரைசதம் உட்பட) ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஒரே ஆண்டில், டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ரிஸ்வான் படைத்தார். அதே போன்று மற்றொரு துவக்க வீரரான பாபர் அசாம் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில், 79 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான Rashid Latif, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகமான PTV Sports-க்கு அளித்துள்ள பேட்டியில், சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு பாகிஸ்தானில் எப்படி கோலி, ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இல்லை என்று நாங்கள் கூறினோமோ, அதே போன்று இப்போது இந்தியர்கள் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் போன்ற வீரர்கள் தங்களிடம் இல்லை என்று நினைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.