மே.தீவுகளுக்கு எதிராக அரைசதம் விளாசிய அஸ்வின்! இந்திய அணி 438 ஓட்டங்கள் குவிப்பு
டிரினிடாட் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்கள் குவித்துள்ளது.
விராட் கோலி 29வது சதம்
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி 288 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா 80 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 57 ஓட்டங்களும் எடுத்தனர். கோலி 87 ஓட்டங்களுடனும், ஜடேஜா 36 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியபோது, விராட் கோலி 29வது சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 341 ஓட்டங்களாக உயர்ந்தபோது கோலி 121 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
BCCI (Twitter)
அஸ்வின் அரைசதம்
அதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் 25 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய பந்துவீச்சாளர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அரைசதம் அடித்தார்.
அவர் 56 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேற, இந்திய அணி 438 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் கெமர் ரோச், வாரிக்கான் தலா 3 விக்கெட்டுகளும், ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
BCCI (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |