உலக உணவு தொழில்நுட்ப மாநாட்டில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு பெற்ற இந்தியா
உலக நாடுகளிடமிருந்து ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தொழில்நுட்பத்தில் இந்தியா முதலீடுகளை பெற்றுள்ளது.
2025 செப்டம்பர் 28-ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற World Food India மாநாட்டில், இந்தியா உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 26 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களில் பங்கேற்றுள்ள.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் 64,000 பேர் நேரடி வேலைவாய்ப்பும், 10 லட்சம் பேர் மறைமுக வாய்ப்புகளும் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
இதில் முக்கிய முதலீட்டாளராக Reliance Consumer Products Ltd ரூ.40,000 கோடி மியூதலீடு செய்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
Coca-Cola India ரூ.25,760 கோடி முதலீடு செய்து புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
மேலும், Amul (GCMMF), Nestle India, Tata Consumer Products, Carlsberg India மற்றும் Lulu Group’s Fair Exports உள்ளிட்ட நிறுவனங்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
Patanjali Foods, Dabur India, Godrej Agrovet, AB InBev, Olam Food Ingredients, Haldiram, Mrs Bectors, Allana Consumer Products, Cremica Food Park, Bluepine Foods, BL Agro போன்ற நிறுவங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
இந்த முதலீடுகள் பால், இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பானங்கள், மசாலா பொருட்கள், பழங்கள்,காய்கறிகள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியுள்ள.
இந்த திட்டங்கள் தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India food processing sector, World Food India summit deals, India food processing investment 2025, Reliance, Cocacola, Amul, Tata