போரால் ஏற்பட்ட பாரிய சிக்கல் - சீனாவின் உதவியை நாடும் இந்தியா
போர் காரணமாக இந்தியாவில் உர தட்டுப்பாடு உருவாக வாய்ப்புள்ள சூழலில் சீனாவிடம் யூரியா ஏற்றுமதி செய்ய இந்தியா கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
போரால் உர தட்டுப்பாடு
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹார்மோஸ் நீரிணை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல்கள் வர முடியாத சூழலில், LPG பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என இந்திய மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தங்களிடம் போதுமான அளவு எரிவாயு இருப்பு உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே போல், இந்தியாவில் உர தட்டுப்பாடு உருவாகும் கவலை உள்ளதாக உர உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG), யூரியா போன்ற நைட்ரஜன் சார்ந்த உரங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய மூலப்பொருளாகும்.
தற்போது மத்திய கிழக்கில் இருந்து LNG சில உர உற்பத்தி ஆலைகள்செயல்பாடுகளைக் குறைத்துள்ளன அல்லது தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
இந்தியா போன்ற விவசாயத்தை பெரிதாக நம்பியுள்ள நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டால் பாரிய சிக்கலுக்கு வழி வகுக்கும்.
சீனாவிடம் கோரிக்கை
போர் தொடங்கியதில் இருந்து யூரியாவின் விலை சுமார் 21% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா பெரிதளவு விவசாயத்தை நம்பியுள்ள நாடு என்பதால், அது அதிகளவில் உரங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

2025 நிதியாண்டில் இந்தியா சுமார் 9.8 மில்லியன் டன் யூரியாவை இறக்குமதி செய்துள்ளது. மேலும் வரும் மாதங்களில் கூடுதலாக 1.7 மில்லியன் டன்கள் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு போதுமான அளவு யூரியா விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக, விரைவில், புதிய யூரியா இறக்குமதிக்கான டெண்டரை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், யூரியா ஏற்றுமதிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்தியா சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. உலகின் மிகப்பெரிய யூரியா உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள சீனா, அதன் ஏற்றுமதியை ஒதுக்கீட்டு முறை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளில் வரையறுக்கப்பட்ட ஏற்றுமதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 2026 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி ஒதுக்கீடுகள் இன்னும் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை.
தேவை ஏற்பட்டால் சீனாவைத் தவிர, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய இந்தியா முயற்சிக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |