மியான்மருக்கு 52 டன் நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்பி உதவி செய்த இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 52 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது.
இந்தியா உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவி செய்யும் நோக்கில் ‘ஆபரேஷன் பிரம்மா’ என்னும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணத்திற்கான (HADR) இந்திய கடற்படையானது உதவி செய்வதற்காக கப்பல்களை அனுப்பியுள்ளது. அதாவது, கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கப்பல்களான சத்புரா, சாவித்ரி ஆகியவை மார்ச் 29 அன்று யாங்கூனுக்குப் புறப்பட்டன.
அதேபோல, அந்தமான் - நிக்கோபார் கட்டளையகத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை கப்பல்களான கர்முக், எல்சியூ 52 ஆகிய கப்பல்களும் நேற்று புறப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் உள்பட 52 டன் நிவாரணப் பொருட்கள் இந்த கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளன.
அதாவது, 'பேரிடர்களின்போது முதலில் உதவி அளிக்கும் நாடு' என்ற இந்தியாவின் தீர்மானத்தின் படி இந்திய கடற்படை உதவி செய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 28-ம் திகதி மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,700 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |