கென்யாவில் கடும் வெள்ளப்பெருக்கு.., இக்கட்டான நேரத்திலும் உதவிக்கரம் நீட்டும் இந்தியா!
சில வாரங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா அனுப்பியது.
கடும் வெள்ளப்பெருக்கு
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் கடந்த சில சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.
இதனால் 267 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.
உதவிய இந்தியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு உதவும் விதமாக கடந்த வாரம் முதல் தவணையாக நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
இந்த நிவாரண பொருட்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா ரோந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பலானது கடந்த 10 -ம் திகதி கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தை சென்றடைந்தது.
இந்நிலையில், கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40டன் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா நேற்று அனுப்பி வைத்தது.
இந்த பொருட்கள் ராணுவத்தின் சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40டன் மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டான தருணத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி துணை நிற்கிறது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |