15 சிக்ஸர்..80 பந்தில் 175 ரன்! வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி..412 ரன் இலக்கு நிர்ணயித்த இந்தியா
U19 டி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 395 ஓட்டங்கள் குவித்தது.
சூர்யவன்ஷி 175 ஓட்டங்கள்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதி வரும் U19 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது. அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.

411 ஓட்டங்கள்
பின்னர் வேதாந்த் 32 ஓட்டங்களும், விஹான் 30 ஓட்டங்களும், அபிக்யான் குண்டு 40 ஓட்டங்களும் விளாசினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கனிஷ்க் சௌகான் 20 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்களில் 411 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்தின் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டுகளும், அலெக்ஸ் கிரீன் மற்றும் செபாஸ்டியன் மோர்கன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |