மழையால் வந்த வினை: அவுஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
பெர்த் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
26 ஓவர்கள் போட்டி
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது.
ரோஹித் (8), விராட் கோஹ்லி (0) சொதப்ப மழையால் ஆட்டம் தடைப்பட்டு 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் 11 ஓட்டங்களில் வெளியேற, அக்ஷர் பட்டேல் நிதானமாக ஓட்டங்களை சேர்த்தார். மீண்டும் மழை குறுக்கிட 26 ஓவர்கள் போட்டி என மாற்றியமைக்கப்பட்டது.
ஆடுகளத்தின் மாற்றத்தால் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டனர். வாஷிங்டனை (10), அக்ஷர் பட்டேலை (31) தொடர்ந்து, அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் (KL Rahul) 31 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
நிதிஷ் குமார் அதிரடி
கடைசி கட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 19 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 26 ஓவர்களில் 136 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அவுஸ்திரேலியாவுக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட், ஓவன் மற்றும் குனெமன் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |