1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்தியா - சாதனைப் படைக்குமா?
இந்தியா இன்று தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இதில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி முதன்முறையாக ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விளையாட உள்ளார். இதனிடையே இப்போட்டி இந்திய அணியின் 1000வது ஒருநாள் போட்டியாகும்.
இந்திய அணி முதல் முறையாக 1974 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100வது போட்டிக்கு கபில்தேவும், 200வது மற்றும் 400வது போட்டிக்கு அசாருதீனும், 300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500வது போட்டிக்கு கங்குலியும், 600வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.