இந்தியா எந்த நாட்டுடன் மிகப்பெரிய எல்லையைப் பகிர்ந்துள்ளது?
இந்தியா எந்த நாட்டுடன் அதிக நிலப்பரப்பில் எல்லையை பகிர்ந்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த நாடு?
இந்தியா தனது நில எல்லைகளை ஏழு அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இதில், மிக குறைவான எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை 106 கி.மீ ஆகும். இது, ஜம்மு காஷ்மீர் வழியாக செல்கிறது.
இந்தியாவின் ஆறாவது நீளமான நில எல்லையானது பூடானுக்கு இடையே உள்ளது. இந்த எல்லையானது 699 கி.மீ ஆகும். இது, சிக்கிம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக செல்கிறது.
இந்தியாவின் ஐந்தாவது நீளமான நில எல்லையானது மியான்மருக்கும் இடையே உள்ளது. இந்த எல்லையானது 1,643 கிலோமீட்டர் ஆகும்.
இது, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் வழியாக செல்கிறது.
இந்தியாவின் நான்காவது நீளமான நில எல்லையானது நேபாளத்திற்கு இடையே உள்ளது. இந்த எல்லையானது 1,758 கிலோமீட்டர்கள் ஆகும். இது, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வழியாக செல்கிறது.
இந்தியாவின் மூன்றாவது நீளமான நில எல்லையானது பாகிஸ்தானுக்கு இடையே உள்ளது. இந்த எல்லையானது 3,323 கிலோமீட்டர்கள் ஆகும். இது, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் வழியாக செல்கிறது.
இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான நில எல்லை சீனாவுக்கு இடையே உள்ளது. இதன் தூரம், 3,488 கிலோமீட்டர்கள் ஆகும். இது, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் வழியாக செல்கிறது.
இந்தியாவின் மிக நீளமான நில எல்லை, பங்களாதேஷ்க்கு இடையே உள்ளது. இதன் தூரம் 4,096.7 கிலோமீட்டர்கள் ஆகும். இது, மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் வழியாக செல்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |