ட்ரம்பின் முடிவிற்கு எதிராக... தாலிபான், பாகிஸ்தான், சீனாவுடன் கூட்டு சேர்ந்த இந்தியா
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெளிநாட்டு இராணுவ உள்கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை எதிர்க்கும் வகையில், ரஷ்யா, சீனா மற்றும் ஏழு நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.
விரிவான ஆலோசனை
மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த பாக்ராம் விமான தளத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாலிபான் ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்ததன் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தாகில் வளர்ச்சியைக் கொண்டுவருவது குறித்து ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் குழு விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் அண்டை நாடுகளில் தங்கள் இராணுவ உள்கட்டமைப்பை நிலைநிறுத்த சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இந்த நாடுகளின் குழு விவரித்துள்ளது.
தாலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி முதல் முறையாக மாஸ்கோ பாணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவால் அமைக்கப்பட்ட பாக்ராம் விமான தளத்தை தாலிபான்கள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் கூறியிருந்தார்.
அமைதி மற்றும் நிலையான
தற்போது மாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டத்தில், இந்தியா, ரஷ்யா, சீனாவுடன் ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்றுள்ளன.
மேலும், பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளுடன் ஆப்கானிஸ்தானின் பொருளாதார உறவுகளின் அவசியத்தை இந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. தூதர் வினய் குமார் தலைமையிலான இந்தியக் குழு, சுதந்திரமான, அமைதி மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானையும், சமூகப் பொருளாதார மேம்பாட்டையும், ஆப்கானிஸ்தான் மக்களின் செழிப்பையும் ஆதரித்துள்ளது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |