மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியா
இந்தியாவில், மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதிவேக ரயில் அறிமுகம்
இந்திய மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "Make in India என்ற திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே (ஐஆர்) தற்போது அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் (ICF) மற்றும் BEML உடன் இணைந்து அதிவேக ரயில்களை உருவாக்குகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும்.
ஒரு ரயிலை தயாரிக்க சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) செலவாகும். இந்த ரயிலில் இருக்கை வசதிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஏரோடைனமிக் வெளிப்புறம், சீல் செய்யப்பட்ட கேங்வேகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி மூலம் கண்காணிப்பு, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சிறந்த விளக்குகள் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ரயிலானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |