ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ரிஷப் பண்ட் நீக்கம்
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வருகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான அணித்தலைவராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணிக்கான துணை அணித்தலைவராக கே.எல் ராகுல் மற்றும் ஒருநாள் அணிக்கான துணை அணித்தலைவராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🚨 News 🚨
— BCCI (@BCCI) May 19, 2026
Presenting #TeamIndia's squads for the @IDFCFIRSTBank Test match and the 3️⃣-match ODI series against Afghanistan in June 🙌#INDvAFG pic.twitter.com/hFiABALLld
டெஸ்ட் அணியில், ஷுப்மன் கில், கே.எல். ராகுல், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, யஷஸ்வி ஜெயஸ்வால், துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ண, தேவத் படிக்கல், ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி, சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணியில்,ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, இஷான் கிஷன், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, ரோஹித் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |