ஓரங்கட்டப்பட்ட ரோகித்..! ரகானே தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும் கடைசி மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நவம்பர் 9ம் தேதி அறிவத்தது.
- ரோகித் சர்மா (கேப்டன்)
- கே.எல். ராகுல் (துணை கேப்டன்)
- ருதுராஜ் கெய்க்வாட்
- ஷ்ரேயாஸ் ஐயர்
- சூர்யகுமார் யாதவ்
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
- வெங்கடேஷ் ஐயர்
- யுஸ்வேந்திர சாஹல்
- அஸ்வின்
- அக்சர் படேல்
- அவேஷ் கான்
- புவனேஷ்வர் குமார்
- தீபக் சாஹர்
- ஹர்ஷல் படேல்
- முகமது சிராஜ்
டி20-ஐ தொடர்ந்து நவம்பர் 25ம் தேதி கான்பூரில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி இறுதி மற்றும் 2வது டெஸ்ட் மும்பையிலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
- ரஹானே (கேப்டன்)
- கே.எல்.ராகுல்
- மயங்க் அகர்வால்
- புஜாரா (துணை கேப்டன்)
- சுப்மான் கில்
- ஷ்ரேயாஸ் ஐயர்
- விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
- கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்)
- ரவீந்திர ஜடேஜா
- அஸ்வின்
- அக்சர் படேல்
- ஜெயந்த் யாதவ்
- இஷாந்த் சர்மா
- உமேஷ் யாதவ்
- சிராஜ்
- பிரசித் கிருஷ்ணா
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விராட் கோலி இணைந்து அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
More details ⬇️https://t.co/PY4AleDW0v#INDvNZ
— BCCI (@BCCI) November 12, 2021
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித், பும்ரா, ஷமி, பந்த், தாக்கூர் ஆகியோருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.