இலங்கை அணியின் முக்கிய வீரர் விலகல்! இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடர் இலங்கை அணி அறிவிப்பு
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Sri Lanka ?? squad for the 3-match ODI series & the 3-match T20I series against India ?? - https://t.co/qVd9nJxpau#SLvIND pic.twitter.com/9gqEGVlM79
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 16, 2021
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அங்கிருப்பதால், இளம் இந்திய அணி இந்த தொடரில் எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், இந்த இரு தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், துவக்க வீரருமான குசால் பெரேரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.