இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான தொடர் ஒத்திவைப்பு! மறு தேதி அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான இப்போட்டி வரும் 13-ஆம் திகதி துவங்குவதாக இருந்தது.
இளம் இந்திய அணி மற்றும் டிராவிட் பயிற்சியாளர் என மிகுந்த எதிர்பார்ப்பை இப்போட்டி கிளப்பியிருந்தது. ஆனால், தற்போது இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் 13-ஆம் திகதி துவங்குவதாக இருந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நான்கு நாட்கள் தள்ளி, 17-ஆம் திகதி துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தினால், இந்த தொடர் நடக்குமா? இல்லையா? என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.