இங்கிலாந்து வீரர் அவுட்டுக்கு பின் கண்டுபிடித்த நடுவர்கள்! ரிஷப் பாண்ட் கிளவுசில் இருந்த டேப்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் விக்கெட் கீப்பிங் கிளவுசில் இருந்த டேப்பை எடுக்கமாறு நடுவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்களும் எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெறும் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 432 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின் மூன்றாவது சீசனின் டீக்கு முன், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மலான் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
அதன் பின் மீண்டும் ஆட்டம் துவங்குவதற்கு முன்பு, போட்டியின் நடுவர்களான Alex Wharf மற்றும் Richard Kettleborough பாண்ட் அணிந்திருக்கும் விக்கெட் கீப்பிங் கிளவ்சில், இருக்கும் டேப்பை எடுக்கும் படி கூறினர்.
MCC கிரிக்கெட் விதிப்படி, அதாவது, 27.2.1 - 27.1 இன் கீழ் விக்கெட் கீப்பர் கிளவுசில், ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை இணைக்கப்பட்டிருக்குமே தவிர மற்ற விரல்களுக்கு இடையில் எதுவும் இணைக்கப்பட்டிருக்காது. இருக்க கூடாது, ஆனால் பாண்ட் கிளவுசில் சுண்டுவிரல் பக்கம் டேப் ஒட்டப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே கிளவுசில் இருந்தே டேப்பை நடுவர்கள் எடுக்கும் படி கூறினர். அதன் படி கோஹ்லி, ரிஷப் பாண்டின் கிளவுசில் இருந்த டேப்பை எடுத்தார்.
இதற்கு முன்பு மலான் அவுட் ஆன போது, ரிஷப் பாண்ட் டேப் போட்டிருந்ததாக கூறப்படுவதால், மலான் அவுட் கிடையாது, என பேச்சு எழுந்துள்ளது, மீண்டும் மலானை பேட்டிங் செய்ய அனுமதித்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.