18 ஆண்டுகளாக நியூசிலாந்திடம் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இந்தியா!. வரலாற்றை மாற்றி எழுதுவாரா கோலி?
கடந்த 18 ஆண்டுகளாக ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி போராடி வரும் நிலையில், இன்று கோலி அந்த வரலாற்றை மாற்றி எழுதுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ள இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் இன்று அக்டோபர் 31 மோதவிருக்கின்றன.
இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி குரூப் 2-வில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியை எதிர்பார்த்திருக்கிறது, ஆனால், வரலாறு இந்தியாவுக்கு எதிராக இருக்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக ஐசிசி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை, கடைசியாக 2003 உலகக் கோப்பையில் கங்குலி கேப்டன்சியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
2007 டி20 உலகக் கோப்பை போட்டியில் Johannesburg-ல், 2016 டி20 உலகக் கோப்பை போட்டியில் நாக்பூரில், 2019ல் மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதி, 2021 Southampton-ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என கடந்த 18 ஆண்டுகளில் இரு அணிகள் மோதிய ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணியே வெற்றிப்பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று நியூசிலாந்தை வீழ்த்தி இந்த வரலாற்றை கோலி மாற்றி எழுதுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பத்திருக்கின்றனர்.