பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிப்பு.., இந்திய ராணுவம் பதிலடி
இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. அதுவும் கடந்த 36 மணி நேரத்தில் நிலைமை மோசமடைந்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று இரவு பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லைகள் (IB) வழியாக பல்வேறு இடங்களுக்கு ட்ரோன்களை செலுத்த முயன்றது.
ஆனால், உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய ராணுவ நடவடிக்கையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |