திடீரென பிரித்தானியாவை கைவிட்ட இந்தியா! நெருக்கடிக்குள்ளாகும் போரிஸ் அரசு
இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி Adar Poonawalla தெரிவித்துள்ளார், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அடுத்த மாதத்திலிருந்து பிரித்தானியாவின் தடுப்பூசி போடும் பணி முடங்கிவிடும் என கூறப்படுகிறது. தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்தியாவை மட்டுமே சார்ந்துள்ளது, இதில் எஸ்ஐஐ-க்கு எந்த தொடர்பும் இல்லை. பிரித்தானியாவுக்கு அதிக டோஸ் அனுமதிக்கும் விடயத்தில் இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் Adar Poonawalla கூறினார்.
ஏற்கனவே மார்ச் மாத தொடக்கத்தில் பிரித்தானியாவுக்கு முதற்கட்டமாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் ஐந்து மில்லியன் டோஸ் வழங்கப்பட்டு இருப்பதை Poonawalla உறுதிப்படுத்தினார்.
எஸ்ஐஐ-க்கு இந்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே, இரண்டாவது கட்டமாக பிரித்தானியாவுக்கு உறுதியளித்த மேலும் ஐந்து மில்லியன் டோஸ் வழங்கப்படும்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகாரித்து வருவதால், அதை எப்படி கட்டுப்படுத்துவது என இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.
புதிய உள்ளூர் ஊரங்குகளை செயல்படுத்தலாமா என்று விவாதித்து வரும் இந்திய அரசு, தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அதிகமான தடுப்பூசிகளை சேமித்து வைக்க வேண்டுமா என்று பரிசீலித்து வருகிறது.