இலங்கை சென்றடைந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல்
இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நிய கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு அதிகம் ஏற்படுவதும் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Photo Credit: REUTERS
இந்த நிலையில் தான் தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக, சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9,500 டன் அரிசி, 200 டன் பால்பவுடர், 30 டன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை இன்று இலங்கையை சென்றுயடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா மேலும் அனுப்பி வைத்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், இலங்கை தற்போது எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் நிவாரணம் வழங்கும் நோக்கில், தமிழக அரசு வழங்கிய 200 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.
Photo Credit: ANI