இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக இவர்ளில் ஒருவர் சரியாக இருப்பார்! BCCI-யிடம் சொன்ன ராகுல் டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ள ராகுல்டிராவிட் இரண்டு பேரின் பெயரை அடுத்த கேப்டனுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், டிராவிட், பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC)-வுடன் நடந்த நேர்காணலின் போது, அவரிடம் இந்திய அணிக்கான டி20 கேப்டனாக யாரை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று ஆலோசனை கேட்கப்பட்ட போது, அவரின் முதல் தேர்வே ரோகித்சர்மாவாக இருந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுலை அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணிக்கு வகுக்கப்பட்டிருக்கும் போட்டி அட்டவணையை அறிந்த டிராவிட், வீரர்களின் பணிச்சுமையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அவர்களுக்கு போதுமான ஓய்வு கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.