வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் - இந்திய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டி20 அணியில் ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.