இந்திய பெண் தொழில்நுட்ப ஜாம்பவான்! யார் இந்த நேஹா நர்கடே?
நேஹா நர்கடேவின் கதை, குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு ஒரு பெரும் உத்வேகம். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர், அமெரிக்காவின் ஜார்ஜியா டெக்கில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தீராத லட்சியம்
தொழில் வாழ்க்கையை தொடங்கிய நேஹா, ஒரக்கிள், லிங்க்டின் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.
வெற்றிகரமான பணி வாழ்க்கை இருந்தாலும், சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவரை உந்தித் தள்ளியது.
2014 ஆம் ஆண்டில், அந்தக் கனவை நனவாக்கும் வகையில், தற்போதைய டிஜிட்டல் உலகில் மிக முக்கியமானதாக இருக்கும் ஸ்ட்ரீமிங் தகவலை நிர்வகிக்கும் தளமான 'கான்ஃப்ளூயன்ட்' (Confluent) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
கான்ஃப்ளூயன்ட் நிறுவனத்தின் வெற்றி அனைவரையும் கவர்ந்தது.
சொத்து மதிப்பு
தற்போது நிறுவனத்தின் இயக்குழு உறுப்பினராக இருக்கும் நேஹா தலைமையில், 9.4 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த நிறுவனத்தில், நேஹாவுக்கு சொந்தமான பங்கு 6% க்கும் அதிகமாக உள்ளது.
இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு சுமார் 520 மில்லியன் டாலராக இருக்கும். ஆனால், சாதித்த பின்னர் நிற்பது நேஹா நார்கடேடின்(Neha Narkhede) பாணி இல்லை.
2021 ஆம் ஆண்டில், மோசடி கண்டறிதலை மையமாகக் கொண்ட 'ஆஸிலேட்டர்' (Oscilar) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கினார்.
தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கணிசமான முதலீடுகளையும் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |