40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்: வேலையில்லாமல் திரும்பிய துயரம்
இந்தியர் ஒருவர் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் சென்ற நிலையில், வேலை கிடைக்காமல் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
அமெரிக்கா சென்ற இந்தியருக்கு ஏற்பட்டுள்ள நிலை
அமெரிக்காவில் கல்வி கற்பதற்காக 40 லட்ச ரூபாய் கடன் வாங்கிய ஒருவர், அமெரிக்காவில் வேலை கிடைக்காததால் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளார்.
I took an education loan of ₹40L to study in the US — now I’m back in India, drowning in debt, and don’t know what to do
byu/theTechPhilosopher inindia
வேலை கிடைப்பதில் சந்தித்த சவால்கள், விசா கட்டுப்பாடுகள், இந்திய மாணவர்களுக்கு internship கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் என பல தடைகள் காரணமாக அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கவில்லையாம்.
இந்தியா திரும்பிய அவருக்கு 75,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அவர் கடனுக்காக மாதந்திர தவணை மட்டுமே 66,000 ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது.
இந்தியா திரும்பி கடனைச் செலுத்தவேண்டியுள்ளதால், மீதமுள்ள 9,000 ரூபாயுடன் கடும் அவஸ்தைக்குள்ளாகியிருக்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |