ரயிலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை - இந்தியாவின் சோதனை வெற்றி
இந்தியா, ரயிலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ரயிலை தளமாக பயன்படுத்தி மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்படும் அக்னி-பிரைம் (Agni-Prime) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
இந்த சோதனை, இந்தியாவின் Strategic Forces Command-உடன் இணைந்து முழுமையான செயல்பட்டு சூழ்நிலையில் நடைபெற்றது.
முதல்முறையாக இந்தியா இவ்வகையான சோதனையை செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்துள்ளார்.
அக்னி-பிரைம் என்பது இரண்டு நிலை திட எரிபொருள் கொண்ட Mid-Range ஏவுகணையாகும். இது 2000 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
1,000 முதல் 3,000 கிலோகிராம் வரை பாரம் ஏற்றக்கூடிய இந்த ஏவுகணை, சாலையிலும் ரயிலிலும் விரைவாக ஏவக்கூடிய வகையில் மூடிய canister-ல் வைக்கப்படுகிறது.
இந்த ரயில்வே லாஞ்சர், மாற்றியமைக்கப்பட்ட ரயில் வாகனமாகும். ஏவுகணை தேவைப்படும்போது, அதன் மேல் பகுதி திறக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் ஏவுகணை படைகளுக்கு அதிக நகர்வு (mobility) மற்றும் மறைமுக திறன்களை வழங்குகிறது.
இந்த ரயில் மற்றும் சாலை ஏவுகணை அமைப்புகள், இந்தியாவின் தாக்குதல் திறனையும் தடுப்பு திறனையும் மேம்படுத்துகின்றன.
இந்த பரிசோதனையின் மூலம் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து, நகரும் ரயில்வே கனிஸ்டர் ஏவுகணை அமைப்புகளை உருவாக்கிய சில நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Agni Prime Missile, Agni Prime Missile test, India Rail missile launcher, DRDO