இந்தியாவின் முதல் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
இந்தியா முதல்முறையாக IADWS வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்தியா முதல்முறையாக IADWS (Integrated Air Defence Weapon System) எனப்படும் புதிய பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்த சோதனையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆகஸ்ட் 23-ஆம் திகதி, ஒரிசா கடற்கரையில் நடத்தியது.
IADWS பாதுகாப்பு அமைப்பு முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், QRSAM (Quick Reaction Surface to Air Missile), VSHORADS (Very Short Range Air Defence System) மற்றும் DEW (Directed Energy Weapon) ஆகிய மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளன.
இந்த பாதுகாப்பு அமைப்பின் முக்கிய நோக்கம் எதிரியின் வான்வழி தாக்குதல்களிலிருந்து முக்கிய கட்டிடங்கள் மற்றும் பகுதிகளை பாதுகாப்பதாகும்.
இந்த வளர்ச்சியை பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், DRDO மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த IADWS சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India air defence system 2025, DRDO IADWS test Odisha, QRSAM VSHORADS DEW India, Multi-layered air defence India, DRDO missile test, Indian defence technology news, Integrated Air Defence Weapon System